குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : மன்னரைச் சேர்ந்தொழுதல்.
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.
Translation:
Seek not, ask not, the secret of the king
to hear;
But if he lets the matter forth, give ear!.
Explanation:
(When the king is engaged) in secret
counsel (with others), ministers should neither over-hear anything whatever nor
pry into it with inquisitive questions, but (wait to) listen when it is
divulged (by the king himself).
கலைஞர் உரை:
பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது. அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
[ads-post]
மு.வ உரை:
(அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது காதுகொடுத்துக் கேட்காதே; என்ன பேச்சு என்று நீயாகக் கேளாதே; அதைப் பற்றி ஆட்சியாளரே சொன்னால் கேட்டுக் கொள்க.
மணக்குடவர் உரை:
யாதொரு பொருளையும் செவிகொடுத்து ஓராது, தொடர்ந்து கேளாது, அப்பொருளை
மறைத்தல் தவிர்ந்தால், பின்பு
கேட்க. இது
கேட்டல் விருப்பமும் குற்ற மென்றது.
பரிமேலழகர் உரை:
மறை - அரசனுக்குப் பிறரோடு மறை நிகழ்வுழி; எப்பொருளும்
ஓரார் - யாதொரு
பொருளையும் செவி கொடுத்துக் கொள்ளாது; தொடரார் - அவனை முடுகி வினவுவதும் செய்யாது; அப்பொருளை
விட்டக்கால் கேட்க - அம்மறைப்
பொருளை அவன் தானே அடக்காது சொல்லியக்கால் கேட்க. ('ஓர்தற்கு ஏற்கும் பொருளாயினும்' என்பார், 'எப்பொருளும்' என்றார். 'மற்று' வினை மாற்றின்
கண் வந்தது.)