குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : மன்னரைச் சேர்ந்தொழுதல்.
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.
Translation:
All whispered words and interchange of
smiles repress,
In presence of the men who kingly power
possess.
Explanation:
While in the presence of the sovereign,
ministers should neither whisper to nor smile at others.
கலைஞர் உரை:
ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்.
[ads-post]
மு.வ உரை:
வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர் முகம் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிப்பதையும் செய்யாது நடந்துகொள்க.
மணக்குடவர் உரை:
அமைந்த பெரியாரிடத்து ஒருவன் செவியுட்
சொல்லுதலும், ஒருவன்
முகம்பார்த்துத் தம்மில் நகுதலும் தவிர்ந்தொழுகல் வேண்டும். இது கூற்றும்
நகையும் ஆகாவென்றது.
பரிமேலழகர் உரை:
ஆன்ற பெரியாரகத்து - அமைந்த அரசர்
அருகு இருந்தால்; செவிச்சொல்லும்
சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் - அவர் காண ஒருவன் செவிக்கண் சொல்லுதலையும் ஒருவன் முகம்
நோக்கி நகுதலையும் தவிர்த்து ஒழுகுக. (சேர்தல்: பிறனொடு சேர்தல். செய்தொழுகின், தம் குற்றம் கண்டு செய்தனவாகக் கொள்வர் என்பது
கருத்து.)