குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்தூய்மை.
துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.
Translation:
The good external help confers is worldly
gain;
By action good men every needed gift
obtain.
Explanation:
The efficacy of support will yield (only)
wealth; (but) the efficacy of action will yield all that is desired.
கலைஞர் உரை:
ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்.
[ads-post]
மு.வ உரை:
ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்.
மணக்குடவர் உரை:
துணைநலம் ஆக்கத்தைக் கொடுக்கும்; வினைநலம்
அவ்வளவேயன்றி வேண்டிய எல்லாவற்றையும் ஒருங்கு கொடுக்கும். துணைநலம் ஆக்கங்
கொடுத்தல் எல்லாரானும் அறியப் படுதலின் ஈண்டு ஏதுவாக வந்தது.
பரிமேலழகர் உரை:
துணை நலம் ஆக்கம் தரூஉம் - ஒருவனுக்குத்
துணையது நன்மை செல்வம் ஒன்றனையும் கொடுக்கும்; வினை நலம் வேண்டிய எல்லாம் தரும் - அவ்வளவன்றி
வினையது நன்மை அவன் வேண்டியன யாவற்றையும் கொடுக்கும். (வேண்டிய எல்லாம்
என்றது இம்மைக்கண் அறம், பொருள், இன்பம்
முதலாயவற்றையும்,மறுமைக்கண்
தான் விரும்பிய பதங்களையும்.
இதனான் காணப்படும் துணை நன்மையினும் கருதப்படும் வினை நன்மை சிறந்தது என
வினைத்தூய்மையது சிறப்புக் கூறப்பட்டது.)