Thirukural 652 of 1330 - திருக்குறள் 652 of 1330


Thirukural 652 of 1330 - திருக்குறள் 652 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்தூய்மை.

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

Translation:

From action evermore thyself restrain
Of glory and of good that yields no gain.

Explanation:

Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).

கலைஞர் உரை:

புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.

[ads-post]

மு. உரை:

புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.

மணக்குடவர் உரை:

எல்லாக் காலமும் தவிர்தல் வேண்டும், புகழொடு நன்மை பயவாத வினையை என்று மென்றது செயலற்ற காலமுமென்றது.

பரிமேலழகர் உரை:

புகழொடு நன்றி பயவா வினை - தம் அரசனுக்கு இம்மைக்கண் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை; என்றும் ஒருவுதல் லேண்டும் - அமைச்சர்க்கு எக்காலத்தும் ஒழிதல் வேண்டும். (பெருகல், சுருங்கல், இடைநிற்றல் என்னும் நிலைவேறுபாடு காலத்தான் வருதலின், 'என்றும்' என்றார். 'வேண்டும்' என்பது ஈண்டு இன்றியமையாது என்னும் பொருட்டு.)

thirukural, kural, thiruvalluvar, valluvar