குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்திட்பம்.
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
Translation:
Though toil and trouble face thee, firm
resolve hold fast,
And do the deeds that pleasure yield at
last.
Explanation:
Though it should cause increasing sorrow
(at the outset), do with firmness the act that yield bliss (in the end).
கலைஞர் உரை:
இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.
[ads-post]
மு.வ உரை:
(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.
மணக்குடவர் உரை:
முற்பாடு துன்பம் உறவரினும்
துணிந்து செய்க, பிற்பாடு
இன்பம் பயக்கும் வினையை.
பரிமேலழகர் உரை:
துன்பம் உறவரினும் - முதற்கண்
மெய்ம்முயற்சியால் தமக்குத் துன்பம் மிக வருமாயினும்; இன்பம் பயக்கும்
வினை துணிவு ஆற்றிச் செய்க
- அது நோக்கித் தளராது முடிவின்கண் இன்பம் பயக்கும் வினையைத் திட்பமுடையராய்ச்
செய்க. (துணிவு - கலங்காமை. அஃதுடையார்க்கு
அல்லது கணிகமாய முயற்சித்துன்பம் நோக்காது நிலையுதலுடைய பரிணாமஇன்பத்தை நோக்கிச்
செய்தல் கூடாமையின், 'துணிவாற்றிச்செய்க' என்றார். இவை இரண்டு
பாட்டானும் அவர் வினைசெய்யுமாறு கூறப்பட்டது.)