Thirukural 406 of 1330 - திருக்குறள் 406 of 1330
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கல்லாமை.
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
Translation:
'They
are': so much is true of men untaught;
But,
like a barren field, they yield us nought!.
Explanation:
The
unlearned are like worthless barren land: all that can be said of them is, that
they exist.
கலைஞர் உரை:
கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.
[ads-post]
மு.வ உரை:
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
மணக்குடவர் உரை:
உளரென்னும் அளவினையுடையாரல்லது, பயன்படாத களர்
நிலத்தை யொப்பர் கல்லாதவர். இது, பிறர்க்குப் பயன்படாரென்றது.
பரிமேலழகர் உரை:
கல்லாதவர் - கல்லாதவர், உளர் என்னும்
மாத்திரையர் அல்லால் - காணப்படுதலான் இலரல்லர் உளர் என்று சிலர் சொல்லும் அளவினர்
ஆதல் அன்றி; பயவாக்
களர் அனையர் - தமக்கும் பிறருக்கும் பயன்படாமையால் விளையாத களர் நிலத்தோடு ஒப்பர்.
(களர் தானும் பேணற்பாடு அழிந்து உயிர்கட்கும் உணவு முதலிய உதவாதது போலத் தாமும்
நன்கு மதிக்கற்பாடு அழிந்து,
பிறர்க்கும் அறிவு முதலிய உதவார் என்பதாம். இதனான் கல்லாதாரது பயன்படாமை
கூறப்பட்டது.)