Thirukural 664 of 1330 - திருக்குறள் 664 of 1330
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்திட்பம்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
Translation:
Easy to every man the speech that shows the
way;
Hard thing to shape one's life by words
they say!.
Explanation:
To say (how an act is to be performed) is
(indeed) easy for any one; but far difficult it is to do according to what has
been said.
கலைஞர் உரை:
சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.
[ads-post]
மு.வ உரை:
இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.
சாலமன் பாப்பையா உரை:
நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.
மணக்குடவர் உரை:
ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று
சொல்லுதல் யாவர்க்கும் எளியவாம். அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்.
பரிமேலழகர் உரை:
சொல்லுதல் யார்க்கும் எளிய - யாம் இவ்வினையை
இவ்வாற்றால் செய்தும் என நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய; சொல்லிய வண்ணம்
செயல் அரியவாம் - அதனை
அவ்வாற்றானே செய்தல் யாவர்க்கும் அரியவாம். (சொல்லுதல், செயல் என்பன சாதிப்பெயர். அரியவற்றை
எண்ணிச் சொல்லுதல் திட்பமில்லாதார்க்கும் இயறலின். 'எளிய' என்றார். இதனால் அதனது அருமை கூறப்பட்டது.)