Thirukural 658 of 1330 - திருக்குறள் 658 of 1330
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்தூய்மை.
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.
Translation:
To those who hate reproof and do forbidden
thing.
What prospers now, in after days shall
anguish bring.
Explanation:
The actions of those, who have not desisted
from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause
them sorrow.
கலைஞர் உரை:
தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்.
[ads-post]
மு.வ உரை:
ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்.
மணக்குடவர் உரை:
நல்லோரால் கடியப்பட்டவற்றைக்
கடிந்து நீக்காது செய்யுமவர்க்கு அவ்வினைகள் தாம் கருதியவாற்றான் முடிந்த பின்பும்
பீடையைத் தரும். இது
நன்மையல்லாத வினையைச் செயின், அது தீமை தருமென்றது. அவை பின்பு காட்டப்படும்.
பரிமேலழகர் உரை:
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு - நூலோர் கடிந்த
வினைகளைத் தாமும் கடிந்தொழியாது பொருள் நோக்கிச் செய்த அமைச்சர்க்கு; அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்
- அவை தூய அன்மையின் முடியா, ஒருவாற்றான் முடியினும், பின் துன்பத்தையே கொடுக்கும். (முடித்தல் - கருதிய பொருள்
தருதல். பீழை
தருதலாகிய பொருளின் தொழில் அதற்குக் காரணமாய வினைகள்மேல் ஏற்றப்பட்டது.)