Thirukural 391 of 1330 - திருக்குறள் 391 of 1330
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கல்வி.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
Translation:
So
learn that you may full and faultless learning gain,
Then
in obedience meet to lessons learnt remain.
Explanation:
Let
a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of
his learning.
கலைஞர் உரை:
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.
[ads-post]
மு.வ உரை:
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.
மணக்குடவர் உரை:
கற்கப்படுவனவற்றைக் குற்றமறக்
கற்க: கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக. இது கற்கவும் வேண்டும்: அதனை
கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:
கற்பவை கசடு அறக் கற்க - ஒருவன்
கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க, கற்றபின் அதற்குத் தக நிற்க - அங்ஙனம் கற்றால், அக்கல்விக்குத்
தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க. ('கற்பவை' என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள்
உணர்த்துவன அன்றிப் பிற பொருள் உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது
பெற்றாம். கசடறக் கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர்
பலருடனும் பலகாலும் பயிறல். நிற்றலாவது: இல்வாழ்வுழிக் 'கருமமும்
உள்படாப் போகமும் துவ்வாத்,
தருமமும் தக்கார்க்கே செய்த'லினும் (நாலடி. 250)துறந்துழித் தவத்தான் மெய் உணர்ந்து அவா அறுத்தலினும்
வழுவாமை. சிறப்புடை மகற்காயின்கற்றல் வேண்டும் என்பதூஉம், அவனால்
கற்கப்படும்நூல்களும், அவற்றைக்
கற்குமாறும், கற்றதனால்
பயனும்இதனாற் கூறப்பட்டன.)